கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் தள்ளிவைப்பு

அகமதாபாத்: கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நேற்று நடைபெற வேண்டிய கொல்கத்தா-பெங்களூர் இடையிலான லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகின்றனர். கூடவே வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் என எல்லோரும் உயிர் பாதுகாப்பு குமிழியில் வைக்கப்பட்டுள்ளனர். கூடவே அடிக்கடி கொரோனா பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைளையும் மீறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த சோதனைகளில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் மற்ற வீரர்கள், ஊழியர்கள் யாருக்கும் தொற்று இல்லை. சோதனைக்கு பிறகு வருண், சந்தீப் அவர்கள் தனிமை படுத்திக் கொண்டனர். மேலும் அணியின் மருத்துவக் குழு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடவே இந்த பிரச்னை காரணமாக நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையிலான 30வது லீக் ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. தள்ளி வைக்கப்பட்ட போட்டி எப்போது நடைபெறும் என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories:

>