×

பாக்ஸ் கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல் சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் சீசன்-2 போட்டி தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள தனியார் உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ரோட்டரி கிளப் ஆப் கிங் டவுன் அணி, சிஎன்ஐ அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் செட்டிநாடு கான்ஸ்டன்டைன் ரவி தியாகராஜன், பிஎஸ்என்ஏ கல்லூரி டிரஸ்டி சூர்யா ரகுராம், ஜி.டி.என் கல்லூரி தாளாளர் ரத்தினம், சிஎன்ஐ மண்டல இயக்குனர் கோபிசன் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ், கோப்பையை வழங்கினர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அமைப்பு தலைவர் அருள் ஞானபிரகாசம், செயலாளர் வினோத் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

The post பாக்ஸ் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Box Cricket Match ,Dindigul CNI Box Cricket Season-2 ,Private Indoor Stadium ,Dadikkombu Road ,Dinakaran ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...