வேலூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 8,628 வாக்குகள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 8,628 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இதில் தமிழகம் முழுவதும் யாருக்கும் வாக்களிக்க விருப்பவில்லை என 5 லட்சம் வாக்குகள் பதிவானது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 8 ஆயிரத்து 628 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது.

தொகுதி வாரியாக நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் விவரம்: வேலூர்-1,441, காட்பாடி-1.889, அணைக்கட்டு-1,791, குடியாத்தம்-1,699, கே.வி.குப்பம்-1,798 வாக்குகள் பதிவானது. இவற்றில் சில தொகுதிகளில் நோட்டாவை விட அமமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories:

>