×

சின்னமனூர் அருகே 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் நாயன்குளம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர், ஏப். 4: சின்னமனூர் அருகே 25 ஆண்டுகளாக ஆக்கிரப்பில் சிக்கியுள்ள நா யன்குளத்தில் மழைநீர் தேங்க முடியாமல் நிலத்தடி நீ ர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளதால் விரைவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூரா ட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் குச்சனூர் மற்றும் ராஜபாளையம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் மொத்தம் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியானது முல்லைப்பெரியாறு பாசன பெறுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் இருபோகம் நெல் சாகுடியும், நிலத்தடி நீர் பாசனத்தில் தென்னை,வாழை, தேக்கு, புளிய மரம், ஆலைக்கரும்பு, தக்காளி, கா ய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது. உத்தமபாளையத்தில் இருந்து முத்துதேவன்பட்டி மா நில நெடுஞ்சாலையில் குச்சனூரிலிரு ந்து துரைச்சாமிபுரம் இடையே கள்ளபட்டியான் காலனி அருகே நாயன்குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, மழை காலங்களில் சாலமலை கரட்டிலிருந்தும் கால்வாய்களின் வழியாக பெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் ஊற்றெடுப்பதால் இக்கண்மாயை சுற்றியுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இதன்காரணமாக இப்பகுதியில் விவசாயம் தொய்வின்றி நடந்தது.

குச்சனூர் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நாயன் குளத்தை கடந்த 25 ஆண்டுக்கு முன் சிலர் ஆக்கிரமித்து 100க்கும் மேற்பட்ட புளியமரத்தை வளர்த்து தோப்பாக மாற்றியுள்ளனர். அங்கு வழிபாட்டு கோயிலையும் கட்டியுள்ளனர். வானம் பார்த்த கண்மாயான இந்த நாயன்குளம் புளியந்தோப்பாக இருப்பதால் அறுவடை செய்து ஆக்கிரமிப்பாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அதேசமயம், கண்மாய்க்கு வரும் ஓடைகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்திருப்பதால் மழை நீர் கால்வாய் வழியாக வர வழியின்றி அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, தடம் மாறி செல்கிறது.
இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரவேண்டிய நீரானது, மெயின் ரோட்டில் ஆறாகவும், க ள்ளபட்டியான் காலனி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது, கண்மாய் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகம், உத்தமபாளை யம் தாசில்தார் அலுவலகம் ,மாவட்ட கலெக்டர் அலு வலகம் என சென்று கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித நடவடி்ககையும் எடுக்கப்படவில்லை. தற்போது நீர்நிலைகளை மேம்படுத்த தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றமும் ,நீர்நிலைக ளின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 25 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் புளியந்தோப்பாக மாறி இருக்கும் நாயன் குளத்தை விவசா யிகளின் நலன் கருதி மீட்டெடுத்து மழை நீர் தேக்கிடவும், விவசாயத்தையும், காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, குச்சனூர் விவசாய சங்க தலைவர் ஆதிநாராயணன் கூறுகையில் , நாயன்குளத்தில் தேங்கும் மழைநீரால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் உதவியாக இருந்தது. குளத்தை ஆக்கிரமித் து புளியந்தோப்பாக மாற்றி கோயிலாகவும் கட்டி வைத்துள்ளனர், நீர்வரத்து கால் வாய்களையும் ஆக்கிரமித்து விட்டதால் மழை நீர் கடக்க வழி இன்றி காலனி குடியிருப்புகளை சூழ்ந்தும் சாலையில் ஆறாகவும் ஓடுவதால் பலவித சிக்கல்களை உருவாக்கி வருகிறது. கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட நாயன்குளத்தை மீட்க வேண்டும் என்றார்.

The post சின்னமனூர் அருகே 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் நாயன்குளம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nayankulam ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்