கேரளாவில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தீவிரம்; குமரி எல்லையில் கேரள போலீசார் கெடுபிடி: இபாஸ், பரிசோதனை கட்டாயம்

களியக்காவிளை: கேரளாவில ்நாளை முதல் மீண்டும் கொரோனா தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், இன்று காலையே குமரி- கேரள எல்லையில் கேரள போலீசார் தீவிர வாகன சோதனை, இபாஸ் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளாவிலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் இருமாநில அரசுகளும் ெகாரோனாவை தடுக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி தமிழக அரசு கடந்த 2 வாரங்களுக்கு முன் இருமாநில எல்லை பகுதி இபாஸ் கட்டாயம் என அறிவித்தது.

இதையடுத்து குமரி- கேரள எல்லை பகுதியான களியக்காவிளை செக்போஸ்ட் உள்பட பிரதான செக்போஸ்ட்களில் இ-பாஸ், பரிசோதனை கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களிடம் இஞ்சிவிளையில் கேரள சுகாதார அதிகாரிகள் இபாஸ் சோதனை. காய்ச்சல், சளி மாதிரி எடுத்து மாநிலத்திற்குள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இன்று சிறிது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளன. ஆனால் நாளை முதல் ஒரு வாரம் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நாளை முதல்  பாறசாலை, பனச்சமூடு, ஊரம்பு, செங்கவிளை, கொல்லங்கோடு, வெள்ளறடை உள்ளிட்ட கேரள எல்லை பகுதியில் அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும திறக்கப்படுகிறது. பொதும்கள் தங்கள் பயணங்களை குறைத்து கொள்ள் வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நாளை உத்தரவை அமல்படுத்தும் விதமாக இன்றே குமரி- ேகரள எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் கேரள போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், ஆட்டோ ஸ்டாண்ட் போன்றவற்றில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து ேபாலீசார், சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்று குமரியில் இருந்து இஞ்சிவிளை பகுதிக்கு வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் இபாஸ், வாகன சோதனை, சளி மாதிரி பரிசோதனை என கேரளா போலீசார் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியுள்ளனர்.

Related Stories:

>