×

உலக யோகாசன போட்டிக்கு தேனி மாணவர்கள் தேர்வு

கம்பம். ஏப். 4: கம்போடியாவில் நடைபெறும் உலக யோகாசன போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு பழநியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி மாவட்ட யோகாசன சங்கத்திலிருந்து யோகா நிபுணர் ராஜேந்திரன், மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவி ராம் தலைமையில் 30 பேர் கொண்ட குழு தேசிய யோகா போட்டிக்கு தகுதி அடிப்படையில் கலந்து கொண்டனர். இதில் 17 முதல் 21 வயது வரை உள்ள பிரிவில் பாளையம் ஹாஜி கருத்தரவுத்தர் கல்லூரியில் மாணவன் ராதேஷ், தேனி கம்மவர் சங்கம் கல்லூரி மாணவன் ரமணன் இருவரும் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

11 வயது முதல் 14 வயது பிரிவில் ரூபிகா, விஜய் ஆதித்யா முதல் பரிசு பெற்றனர். ஹாசினி, விஷ்வந்த், சரண் தேவ், ஜெய சந்தோஷ் இரண்டாம் பரிசும், கலாநிதி, கோகுல் தங்கம், தருண் வர்ஷன், ஹரிஹர சுதன் அக்ஷய் அஜித்தா, அகிலன், கவிப்ரித்தன் ஹரிஷ், நந்த நிவாஸினி யாசிலா மூன்றாம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்கள் வருகின்ற மே மாதத்தில் கம்போடியாவில் நடைபெறும் உலக யோகாசன போட்டியில் கலந்து கொள்கிறார்கள். உலக யோகாசனப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் தேனி மாவட்ட யோகாசன சங்க தலைவர் காந்தவாசன், துணைத் தலைவர் ஹைதர் அலி பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

The post உலக யோகாசன போட்டிக்கு தேனி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : World Yoga ,World Yoga Competition ,Cambodia ,Palani ,Dinakaran ,
× RELATED ஆயிரம் லிங்கங்களின் ஆறு