×

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 352 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுக்கோட்டை, ஏப்.4: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 352 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கவிதா ராமு, உத்தரவிட்டார். மேலும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில், மல்பரி நடவு, பட்டுப்புழு வளர்ப்பு குடில், நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி போன்றவற்றிற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

அதன்படி பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 மும், இரண்டாம் பரிசாக ரூ.20,000 மும், மூன்றாவது பரிசாக ரூ.15,000 மும் என மொத்தம் ரூ.3,22,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 352 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,People's Grievance Redressal Day ,Pudukottai District Collector ,District Collector ,Kavita Ramu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...