×

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோயில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர், ஏப்.4: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் 2ஆம் கட்டமாக நேற்று (3ம்தேதி) காலை நடைபெற்றது. பெரம்பலூர் அருகேயூள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இக்கோயில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் பூர்வீகக் கோவில் செல்லியம்மன், செங்க மலையான், பெரியசாமி உள்ளிட்ட தெய்வங்களுடன் அருகே பச்சை மலை தொடர்ச்சியிலுள்ள பெரியசாமி மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கோவிலின் கும்பா பிஷேகம் கடந்த 27 ம்தேதி அதிகாலை நடைபெற்றது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டுமே நிறுவப்பட்டி ருந்ததால் அந்த சிலைக்கு மட்டுமேகும்பாபிஷேகம் நட த்தப் பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து உலகின் மிக உயரமான சுடுகழிமண் சிற்பங்கங்களாக 25, 23அடி உயரங்களில் பிர மாண்டமாகத் தயாரிக்கப் பட்ட புதிய சிற்பங்களான பெரியசாமி சிலை, செங்க மலையான் சிலை, பொன் னுசாமி சிலை, கிணத்தடியார், ஆத்தடியார், சப்த கன்னியர், செங்கமலையான், கொரப்புலியான், புலிகருப் பையா, குதிரைகள், வீரர் சிலைகள், 18 சித்தர்களின் சிலைகளும் என புவிசார் குறியீடு பெற்ற வில்லியனூர் ஒதியம் பட்டு பகுதியில் புதிதாக தயாரிக்கப்பட்டு 7 லாரிகளில் பெரியசாமி மலைக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட சிலைகள் கிரேன்களின் மூலம் நிறுவி பிரதிஷ்டை செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுக்காலை 2ம் கட்ட கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், து ணை ஆணையர் ஞானசேகரன், பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கலியபெருமாள், உறுப் பினர் தழுதாழை பாஸ்கர், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி ஆணையர் லெட்சுமணன், செயற் பொறியாளர் பெரியசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் அழகுமணி, விஜயகுமார், செயல்அலுவலர் வேல்முருகன் மற்றும் திருப்பணிக் குழு நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உடனிருந்தனர்.

The post பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Siruvachur Periyaswamy Hill Temple ,Perambalur ,Siruvachur Periaswamy hill temple ,Perambalur… ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்