×

வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் ஜம்பெரும் விழா

வேதாரண்யம்,ஏப்.4: வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகபொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர் மன்ற தலைவர் புகழேந்தி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வர்த்தக சங்க தலைவர் தென்னரசு புதிய கல்விப் புரவலர்களைப் பாராட்டி பேசினார்.

வட்டாரக் கல்வி அலுவலர் ராமலிங்கம், 2023-24 மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் தட்சணமூர்த்த்தி, சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் செந்தில், நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் தனவதி வரவேற்றார். உதவி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

The post வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் ஜம்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Jamperum Festival ,Vembadevankadu ,Panchayat Union Primary School ,Vedaranyam ,Vembadevankadu Panchayat Union Primary School ,School Parent Teacher Association ,Dinakaran ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து