தலைமைச் செயலகத்தை காலி செய்யும் பணி தீவிரம்: முன்னாள் அமைச்சர்களின் அறைகளில் பெயர்ப்பலகைகள் அகற்றம்

சென்னை: திமுக ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளை காலி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட 15வது சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 23ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, 16வது சட்டப் பேரவையை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்று நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டிருந்த 76 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 125 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது திமுகவினர் மட்டுமே 126 பேர் வெற்றி பெற்றுள்ளதால் திமுக தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதிவேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளை காலி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகிறது.

Related Stories:

>