×

புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகனுக்கு உயர் சிகிச்சைக்கு உதவிட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் தாய் கோரிக்கை

கரூர், ஏப்.4: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், அரியவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது மகனுக்கு உயர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் சிறுவனின் தாய் மனு கொடுத்தார். கரூர் கலெக்டர் அலுவவகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானூர் பகுதியை சேர்ந்த உத்திராபதி என்ற பெண், தனது 8வயது மகனுடன் வந்து கலெக்டர் பிரபுசங்கரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது இளைய மகன் அஸ்வினுக்கு 8 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் அறிகுறியாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, அரியவகை ரத்த புற்றுநோய் என தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களாக திருச்சி உள்பட பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அதிக பணம் செலவு செய்ய முடியாமல் உள்ளோம். எனவே எனது மகனுக்கு உயர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகனுக்கு உயர் சிகிச்சைக்கு உதவிட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் தாய் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Grievance Redressal Day ,Karur Collector ,Dinakaran ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்