×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாமக்கல், ஏப்.4: நாமக்கல்லில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை ராஜேஸ்குமார் எம்பி துவக்கி வைத்தார். மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நேற்று துவங்கியது. கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ம்தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சேந்தமங்கலம் சாலையில் நடைபெற்றது. கிழக்கு நகர திமுக செயலாளர் பூபதி வரவேற்றார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக படிவத்தில் கையொப்பமிட்டு சேர்ந்தனர்.

அப்போது ராஜேஸ்குமார் எம்பி கூறியதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், சென்னையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்துள்ளார். இதன் அடிப்படையில் இன்று (நேற்று) முதல் ஜூன் மாதம் 3ம் தேதி வரை 2 மாதம், தமிழகம் முழுவதும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெறுகிறது. நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான புதிய உறுப்பினர்கள் திமுகவில் சேர்க்கப்பட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர், கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை இன்று துவங்கியுள்ளது. இவ்வாறு ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்லைவர் மணிமாறன், தெற்கு நகர செயலாளர் ராணா.ஆனந்த், நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரன், சரவணன், நந்தகுமார், இளம்பரிதி, தேவராஜன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், தகவல் தொழில்நுட்ப அணி கடல்அரசன் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Namakkal ,Rajeskumar ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...