நீலகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்-குன்னூர் எம்எல்ஏ ராமசந்திரன் பேட்டி

ஊட்டி : குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் கூடலூர் தொகுதியில் ஒருமுறையும், குன்னூரில் ஏற்கனவே ஒருமுறை வெற்றி பெற்ற நிலையில், தற்போது 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.

குன்னூர் தொகுதியின் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் மாவட்டம் முழுமைக்கும் நலத்திட்டங்களை கொண்டு சென்று, மக்கள் மனதில் எப்போதும் இருப்பேன். நீலகிரிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். கோத்தகிரியில் அரசு கலை கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குன்னூர் நகராட்சி மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் நீலகிரி மாவட்டத்திற்கென திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன்’’ என்றார்.

Related Stories:

>