×

22 ஆண்டுகளுக்குப் பின் கடத்தூர்-கணியூர் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

உடுமலை, ஏப். 4: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் கடத்தூர் முதல் கணியூர் வரையிலான தார் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 22 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். சாலையின் இருபுறங்களிலும் பள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியே மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், பழநி போன்ற இடங்களுக்கு பேருந்துகள் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. குறுகலான சாலையில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது.

இதையடுத்து, இச்சாலையை சீரமைக்க தமிழக அரசு ரூ.2.68 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான பூமி பூஜை கடத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று பணிகளை துவக்கிவைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் கமலவேணி கலையரசு, துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுபினர்கள்.நிகழ்ச்சியில் ஜெயராமகிருஷ்ணன், முபாரக்அலி, ராமலிங்கம், சாகுல்அமீது,ஈஸ்வரசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post 22 ஆண்டுகளுக்குப் பின் கடத்தூர்-கணியூர் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kaduur-Kaniyur ,Udumalai ,Kaduur ,Kanyur ,Kaduur Panchayat ,Madathikulam Union ,Tirupur District ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடி உடைந்தது