×

சென்னிமலை அடிவாரத்தில் பேருந்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வகையில் ரூ.64 லட்சத்தில் கூடம் அமைப்பு பணி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார்

ஈரோடு, ஏப். 4: சென்னிமலை அடிவாரத்தில் ரூ.64 லட்சம் மதிப்பில் பேருந்துக்காக பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து, காத்திருப்பு கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிதியிலிருந்து ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் காத்திருப்பு கூடம் மற்றும் பக்தர்கள் வரிசையில் நின்று செல்லும் தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த காத்திருப்பு கூடம் சுமார் 1,800 சதுர அடி பரப்பளவில் முழு கான்கிரீட் மேற்கூரையுடன் அமையவுள்ளது. இப்பணியை விரைவாக முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநராட்சி 4ம் மண்டலக்குழு தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் (பொ) அமுதா, கோயில் செயல் அலுவலர் சரவணன், கண்காணிப்பாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னிமலை அடிவாரத்தில் பேருந்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வகையில் ரூ.64 லட்சத்தில் கூடம் அமைப்பு பணி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Chennimalai ,Erode ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...