×

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

திருச்செந்தூர் : திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக அனிதாராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக கேஆர்எம் ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளராக வடமலைபாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் 63,011 வாக்குகள் பெற்று 2ம் இடத்துக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியான் 15,063 வாக்குகள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியன் 3,766 வாக்குகள் பெற்று 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் தனப்ரியா வெற்றி சான்றிதழ் வழங்கினார்.


Tags : Anita Radakrishnan ,Divitha ,Threchendur , Thiruchendur: DMK candidate Anita Radhakrishnan won the Thiruchendur constituency with 88,274 votes.
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...