×

காலை 7 – 11 மணி, மாலை 4 – 9 மணி வரைதூத்துக்குடி மாநகருக்குள்கனரக வாகனங்கள் நுழைய தடை

தூத்துக்குடி, ஏப். 4: தூத்துக்குடி மாநகருக்குள் காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் போக்குவரத்து திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜிசரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, தூத்துக்குடி டவுன் பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மாநகருக்குள் வரக்கூடாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் சப்-கலெக்டர் கவுரவ்குமார், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காலை 7 – 11 மணி, மாலை 4 – 9 மணி வரை
தூத்துக்குடி மாநகருக்குள்
கனரக வாகனங்கள் நுழைய தடை
appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...