×

பாளை, நெல்லை டவுன், தச்சநல்லூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை

நெல்லை ஏப். 4: திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையின் அங்கமாக, பாளையங்கோட்டை, நெல்லை டவுன் 27வது வார்டு, தச்சநல்லூர் 1வது வார்டு காந்தி சிலை முன்பு ஆகிய பகுதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கையை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ துவக்கிவைத்தார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, உடன்பிறப்புகளாய் இணைவோம், ஒரு கோடி உறுப்பினர் புதிதாக சேர்க்கும் திட்டத்தின் அங்கமாக, பாளை. தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை, நெல்லை மாநகர திமுக பேட்டை பகுதி 27வது வார்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தச்சநல்லூர் 1வது வார்டு காந்தி சிலை முன்பு ஆகிய பகுதிகளில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பாளை. தொகுதி ஹெலன் டேவிட்சன், நெல்லை தொகுதி வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ, மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், தர்மன், மண்டல தலைவர்கள் நெல்லை மகேஸ்வரி, பாளை. பிரான்சிஸ், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நெல்லை டவுன் நமச்சிவாயம் கோபி, பாளை. அண்டன் செல்லத்துரை, முன்னாள் மேயர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் உலகநாதன், பேச்சியம்மாள், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் அந்தோனி, வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், முன்னாள் எம்.பி வசந்தி முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் காசிம், விவசாய அணி கால்வாய் துரை பாண்டியன், பொறியாளர் அணி சாய்பாபா, மகளிரணி சௌந்திரம், பேபி குமார், கண்ணன், வினோத், சுடலைமணி, மாநகர பிரதிநிதி பால் இசக்கி, தச்சை பகுதி அவைத்தலைவர் முருகப்பெருமாள், தச்சை பகுதி துணைச் செயலாளர் எல்.எஸ்.சீனி, வட்டச் செயலாளர்கள் செய்யது முகைதீன், பேபி கோபால், பிரேம் கணேசன், பிபி ராஜா, ஜாய், சடாமுனி, வட்ட பிரதிநிதி மாயா கிருஷ்ணன், மாரிசாமி, பால்கண்ணன், விஜயகுமார், திருவடி, முருகன், புயல் ராசையா, நாவல்டி நம்பி, இளைஞர் அணி கண்ணா, பிரவீன், சிட்டி, சக்திவேல், முருகன், பகுதி சபா தலைவர் முத்துரங்கராஜ், சீனி மற்றும் தச்சை பகுதி திமுகவினர் பங்கேற்றனர். தச்சநல்லூர் 1வது வார்டு காந்தி சிலை முன்பாக நடந்த உறுப்பினர் சேர்க்கை ஏற்பாடுகளை திமுக பொதுக்குழு உறுப்பினரும், நெல்லை மாநகராட்சி துணை மேயருமான கே.ஆர்.ராஜு, 13வது வார்டு கவுன்சிலர் டாக்டர் சங்கர், மாவட்ட சிறுபான்மையர் பிரிவு மீரான் ஜெய்லானி செய்திருந்தனர். நெல்லை பேட்டை பகுதி 27-வது வார்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதி உறுப்பினர் சேர்க்கை ஏற்பாடுகளை 27வது வட்ட செயலாளர் கேபிள் குமரேசன் செய்திருந்தார்.

The post பாளை, நெல்லை டவுன், தச்சநல்லூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : DMK ,Palai, Nellai Town, ,Thachanallur ,Balayangottai ,Nellie Town 27th Ward ,Balai, Nellai Town ,Dinakaran ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு