தமிழகத்தில் உதயமாகிறது உதயசூரியன்!.. மு.க.ஸ்டாலின் எனும் நான்… தமிழக முதல்வராக வருகிற 7ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : நாடே ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக மட்டும் 127 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வி அடைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவை அவரது மகன் மு.க.ஸ்டாலின் நினைவாக்கிவிட்டார். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதயமாகிறது. வெற்றி பெற்றவுடன் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதிவேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் எனும் நான்… என ஸ்டாலின் உச்சரிக்கும் அந்த வார்த்தைகளை கேட்க திமுக தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதிவியேற்பு விழா நடைபெறுமென ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories:

>