×

ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1

பாரிஸ்: ஏடிபி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்காததால், ஜோகோவிச்சுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. இதனால், அங்கு நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்பதில் சிக்கல் நீடிப்பதுடன் தரவரிசையிலும் பின்னடைவை சந்திக்க நேரிட்டுள்ளது. ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்திய இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), மயாமி ஓபன் அரையிறுதியில் தோல்வியை சந்தித்ததால் 2வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

ஜோகோவிச் (7,160 புள்ளி) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அல்கரஸ் (6,780), சிட்சிபாஸ் (கிரீஸ், 5,770), மெத்வதேவ் (ரஷ்யா, 5,150), கேஸ்பர் ரூட் (நார்வே, 5,005) ஆகியோர் டாப் 5ல் உள்ளனர். ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (2,715) 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

The post ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Paris ,ATP ,Novak Djokovic ,Dinakaran ,
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...