×

மயாமி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் சாம்பியன்

மயாமி: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னருடன் (21 வயது, 9வது ரேங்க்) மோதிய மெத்வதேவ் (27 வயது, 4வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக மயாமி ஓபனில் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

நடப்பு சீசனில் மெத்வதேவ் வென்ற 4வது சாம்பியன் பட்டம் இது. மேலும், ‘ஏடிபி மாஸ்டர்ஸ் 1000’ தொடர்களில் அவர் வென்ற 5வது சாம்பியன் பட்டமாகவும் மயாமி ஓபன் அமைந்தது. முன்னதாக, 2019ல் சின்சினாட்டி ஓபன், ஷாங்காய் ஓபன், 2020ல் பாரிஸ் ஓபன், 2021ல் டொரான்டோ ஓபனில் மெத்வதேவ் கோப்பையை கைப்பற்றி இருந்தார்.

The post மயாமி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Miami Open Tennis ,Medvedev ,Miami ,Miami Open ,United States ,Danil Medvedev ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்