இயக்குனர் சேரன் முதல் தனுஷ் வரை…தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

சென்னை : தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இடம் பெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்” என்றும் “முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இயக்குநர் சேரன், “புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக்கழக வெற்றியாளர்களுக்கும் அமையவிருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்கள்.. நல்லாட்சி நடக்கட்டும்.. நாட்டு மக்கள் நலம் பெறட்டும். உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கு, முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துக்களைத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>