அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி : மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடே ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக மட்டும் 127 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வி அடைந்துள்ளது.இதையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin

 அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasanஅவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!. பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: