பிரேமலதா விஜயகாந்த் 3வது இடம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் தோல்வி அடைந்தார்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிகவின் பொருளாளரும், தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 76 ஆயிரத்து 909 வாக்குகள் பெற்றார். இரண்டாமிடத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக கார்த்திகேயன் களமிறங்கி 75 ஆயிரத்து 998 வாக்குகளைப் பெற்றார்.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேமலதா  25ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இங்கு நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பிரேமலதாவுக்கு 2-ம் இடம் கூட கிடைக்காமல் மூன்றாம் இடம் மட்டுமே கிடைத்தது. இது, தே.மு.தி.க.வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: