×

தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் எனது அன்பு நண்பர் மதிப்பதிற்குரிய மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி, பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Rajinikanth ,MK Stalin , Make Tamil Nadu a prosperous state: Rajinikanth congratulates MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...