×

கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (எ) குள்ள பிரசாந்த் (29). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர்மீது 3 கொலை, அடிதடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள காய்கறி கடைக்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்தவர்களிடம் மாமூல் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர்கள் எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பிரசாந்த்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Prashant (A) Kulla Prashanth ,Vyasarpadi MKP Nagar ,Dinakaran ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...