கோவை தெற்கில் கமல் தோல்வி: வானதி சீனிவாசன் 1358 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் பின்னடைவில் உள்ளார். வானதி சீனிவாசன் 1358 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜனதா தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இரண்டாவது முறையாக களம் இறங்கினார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டார்.  

தேர்தல் பிரசாரம் துவங்கிய நாளில் இருந்தே இம்மூவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின்போதும் இந்த போட்டி நீடித்தது. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தனர். 20வது சுற்றுக்கு பிறகு வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மொத்த வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் வானதி சீனிவாசன் 51,209, கமல்ஹாசன் 49,851, மயூரா ஜெயக்குமார் 41,691 வாக்குகள் பெற்றனர். பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் 1358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்.

Related Stories:

>