×

பிரதமர் கல்வி தகுதியின் பின்னணியில் மர்மம்? சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கேள்வி

மும்பை: பிரதமர் மோடியின் கல்வி தகுதியை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை தர டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் கடந்த 2016ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் பிரதமர் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்ட நுழைவு வாயிலில் பிரதமரின் கல்வி தகுதியை குறிப்பிடுங்கள். அவரது கல்வி தகுதியை நாடாளுமன்றமும், நாடும் அறிந்திருக்கட்டும். பிரதமரின் கல்வி தகுதியை மறைப்பதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? அதை ஏன் மறைக்க வேண்டும். நாட்டின் ஜனாதிபதி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது எங்களின் கல்வி பட்டம் குறித்து கேட்கப்படலாம். பிரதமரின் கல்வி தகுதியை ஏன் மறைக்க வேண்டும்? பிரதமர் மோடி முன்வந்து தனது கல்வி தகுதி குறித்து தெளிவுபடுத்த வேண்டும் ” என குறிப்பிட்டார்.

The post பிரதமர் கல்வி தகுதியின் பின்னணியில் மர்மம்? சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Shiv Sena ,Sanjay Raut ,Mumbai ,PM Modi ,Sanjay Rawat ,Dinakaran ,
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு