×

வரதராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: வரதராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடப் பணியை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி 1971ம் ஆண்டு தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் இருந்தபோது ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுந்தடைந்து இருந்ததாலும், இடநெருக்கடியாலும் மாணவர்கள் பெரிதும் அவதியுற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட அவர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தருவதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து புதியதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், காந்திமதிநாதன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் ஜனார்த்தனன், இளையான், புகழேந்தி, பாஸ்கர், பிரபாகரன், பிரகாஷ், குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி சங்கர், பக்தவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கலையரசன், தணிகாசலம், பொன்.முருகன், சைமன், பாலமுருகன், செந்தில்குமார், பாபு, கேசவன், திருமலைராஜ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வரதராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Varadarajapuram Government Middle ,School ,Krishnasamy MLA ,Thiruvallur ,A.Krishnaswamy ,MLA ,Varadarajapuram Government Middle School ,Krishnaswamy ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி