×

99 இடங்களில் வெற்றி பெற்று கேரளாவில் ஆட்சியை தக்கவைத்தார் பினராய்: பாஜ.வுக்கு பூஜ்யம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று, 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகளும், பாஜ.வுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராய் விஜயன் முதல்வராகிறார். இந்நிலையில், இந்த மாதத்தில் கடந்த மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் இதுவரை எந்தக் கட்சியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது. இதுவரை காங்கிரஸ் கூட்டணியும் கம்யூனிஸ்ட் கூட்டணியும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்தன.

ஆனால், இம்முறை மீண்டும் இடது முன்னணி ஆட்சியமைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பெருவாரியான வார்டுகளில் இடது முன்னணி வெற்றி பெற்றது. இதனால், இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் இடது முன்னணி தான் வெற்றி பெறும் என பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் இடது முன்னணி தான் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்த கணிப்புகள் அனைத்தும் உண்மையாகிவிட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இடது முன்னணி தான் முன்னிலை வகித்து வந்தது. இறுதியில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களை பிடித்து, 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களை பிடித்தது. பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த வெற்றியின் மூலம், கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பினராய் விஜயனும் மீண்டும் முதல்வராகிறார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

* 2ம் முறை ஆட்சி
கம்யூனிஸ்ட் சாதனை
கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இதன் மூலம், கேரள வரலாற்றில் ஆளும் கட்சி, அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு, 2வது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகும். கம்யூனிஸ்ட் கட்சி இந்த சாதனையை படைத்துள்ளது.

* கையில் இருந்த ஒரு தொகுதியும் போனது
கேரளாவில் 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்தான், இம்மாநிலத்தில் பாஜ முதன்முதலாக வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியில் பாஜ.வின் மூத்த தலைவரான ராஜகோபால் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இரட்டை இலக்கத்தை எட்டுவோம் என்று பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரன் கூறினார். ஆனால், இந்த தேர்தலில் பாஜ.விடம் இருந்த ஒரு தொகுதியும் பறிபோய் விட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது, நேமம் தவிர நடிகர் சுரேஷ்கோபி போட்டியிட்ட திருச்சூர் மற்றும் மெட்ரோமேன் தரன் போட்டியிட்ட பாலக்காடு தொகுதிகளில் பாஜ முன்னிலையில் இருந்தது. பல சுற்றுகள் எண்ணும் வரை முன்னிலையில் இருந்த பாஜ. கடைசி சுற்றுக்கு முன்பாக தோல்வியை தழுவியது.

* கையில் இருந்த ஒரு தொகுதியும் போனது
கேரளாவில் 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்தான், இம்மாநிலத்தில் பாஜ முதன்முதலாக வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியில் பாஜ.வின் மூத்த தலைவரான ராஜகோபால் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இரட்டை இலக்கத்தை எட்டுவோம் என்று பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரன் கூறினார். ஆனால், இந்த தேர்தலில் பாஜ.விடம் இருந்த ஒரு தொகுதியும் பறிபோய் விட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது, நேமம் தவிர நடிகர் சுரேஷ்கோபி போட்டியிட்ட திருச்சூர் மற்றும் மெட்ரோமேன் ஸ்ரீதரன் போட்டியிட்ட பாலக்காடு தொகுதிகளில் பாஜ முன்னிலையில் இருந்தது. பல சுற்றுகள் எண்ணும் வரை முன்னிலையில் இருந்த பாஜ. கடைசி சுற்றுக்கு முன்பாக தோல்வியை தழுவியது.


Tags : Binarai ,Kerala ,BJP , Binarayi retains power in Kerala after winning 99 seats: Zero for BJP
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...