கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஒன்று கூடுவது, ஊர்வலம் செல்வது போன்ற கொண்டாட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. நேற்று 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கட்சி தொண்டர்கள் சில மாநிலங்களில் பட்டாசு வெடித்து, தங்கள் வெற்றியை கொண்டாடினர். தேர்தல் நடந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், ‘தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடைபெறும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ)யை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு உள்ளது.

Related Stories:

>