×

எடப்பாடி வெற்றி ஓபிஎஸ் முன்னணி

சென்னை: இடைப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிட்டார். மேலும், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மநீம சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் நின்றனர். வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

இறுதிச் சுற்று முடிவில் 1,63,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69,352 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீரத்னா 6,626 வாக்குகளும், மநீம வேட்பாளர் தாசப்பராஜ் 1547 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பூக்கடை சேகர் 774 வாக்குகளும் பெற்றுள்ளனர். இறுதியில் திமுக வேட்பாளரை விட 93,803 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் 15வது சுற்று முடிவில், 58,506 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 50,679 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 7,827.


Tags : Edappadi , Edappadi wins OPS lead
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்