×

அரசுப் பேருந்து டிரைவர் மீது தாக்குதல்: டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான வீரராகவர் திருக்கோயில் அமைந்துள்ள தேரடியில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாைளர்கள் ஒன்று கூடி, எந்தெந்த பகுதிக்கு யார்யார் செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இவர்கள் போக்குவரத்து நெரிசலான பகுதியில் சாலையோரத்தில் நின்று ஆட்களை பிரித்து அனுப்புவது வழக்கம். நேற்று செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு தடம் எண் 55 என்ற அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. தேரடி அருகே பேருந்து வந்தபோது, சாலையோரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததால் திரும்ப வழி இல்லாமல் சிறிது நேரம் பேருந்து நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அரசுப் பேருந்து டிரைவர், கட்டிட தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவரை அரசுப் பேருந்து டிரைவர் தாக்கிவிட்டு பேருந்தை எடுத்துச் சென்று பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ் நிலையத்திற்குள் இருந்த அரசுப் பேருந்து டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

The post அரசுப் பேருந்து டிரைவர் மீது தாக்குதல்: டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : on ,Tiruvallur ,Theradi ,Veeraragavar Thirukoil ,
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது