×

டெல்லியில் மோடியுடன் பூடான் மன்னர் இன்று சந்திப்பு

புதுடெல்லி: எல்லை விவகாரத்தில் இந்தியாவைப் போலவே பூடானும் சீனாவால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், 3 நாள் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் நேற்று டெல்லி வந்தார். டெல்லி விமானநிலையத்தில் அவரை, ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடி உடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியா உதவியுடன் பூடானில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.

The post டெல்லியில் மோடியுடன் பூடான் மன்னர் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,New Delhi ,Bhutan ,India ,China ,King ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...