தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவு

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதில், தபால் வாக்குகளைப் பொறுத்தவரை திமுகதான் அதிக இடங்களில் முன்னிலை வகித்தன. பின்னர் வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கத் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்டணி மெஜாரிட்டியைப் பிடித்தது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தாராபுரம் தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி 48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக எல். முருகன் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

Related Stories:

>