×

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பல இடங்களில் 3வது இடம்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு 234 தொகுதிகளில் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக, பாஜ அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கூட்டணிக்கு அடுத்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பெற்றுள்ளது. இக்கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளை அடுத்து அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.

திருெவாற்றியூரில் போட்டியிட்ட சீமானும் 3வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் மநீம கட்சி தலைவர் கமல் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ள போதிலும் அக்கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவில் டிடிவி.தினகரன் மட்டுமே கோவில்பட்டி தொகுதியில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

Tags : Sieman's ,TN , Seeman's Naam Tamil Party is 3rd in many places
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்