×

திண்டுக்கல் அருகே வர்றாங்க...கொட்டுறாங்க...எரிக்கிறாங்க... புகையால் ரோட்டோரங்கள் இருளாகி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நான்கு வழிச்சாலையோரங்கள், குடியிருப்புப் பகுதிகள், முக்கிய சாலையோரங்களில் குப்பை தொடர்ந்து ெகாட்டப்பட்டு எரிக்கப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.

திண்டுக்கல் அருகே சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட திண்டுக்கல் பழைய கரூர் ரோடு நகரின் நுழைவு சாலையாக சாலையாக உள்ளது. இந்த சாலையின் சர்வீஸ் ரோட்டில் சாக்கு மூட்டைகளில், பாலிதீன் பைகளில் மோசமான கழிவுகளை கொண்டு வந்து, சிலர் இரவு நேரங்களில் கொட்டி விட்டு, அங்கேயே தீ வைக்கின்றனர். இந்த குப்பை எரிக்கப்படும் போது எழும் கரும்புகையால் சாலை முழுவதும் மறைந்து இருள் சூழ்கிறது.

சாலையில் வாகனங்கள் ஓட்டி வருபவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு, வாகனத்தை ஓட்டவே மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையோரத்தில் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை உண்டாகிறது. இதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், என்ன தான் செய்கிறது. சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பையில் தீ வைத்து கொளுத்துவதால், கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. எழும் புகையால், ரோட்டில் செல்பவர்கள், முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியாமல், விபத்துக்குள்ளாகின்றனர், என்றனர்.

Tags : Varranga ,Tindukkal ,Kotkanganga , Dindigul: In most parts of Dindigul district, there are four sidewalks, residential areas,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் 2வது மெகா...