'அரசியல் கட்சிகள் வெற்றி கொண்டாட்டங்களை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை'!: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில தலைமை செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் வீதியில் இறங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனைவரும் தங்கள் வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கட்சி தலைமை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்துகொண்டே இருக்கிறது. சில மாநிலங்களில் அந்த கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் பட்சத்தில் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல் திமுக கட்சி முன்னிலை வகித்து வருவதால் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இவை அனைத்தும் புகாராக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அதில், அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தேர்தல் திருவிழா இருந்தாலும் கூட கொரோனா ஒரு திருவிழாவாக ஆகிவிடக்கூடாது. நாம் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலைமை செயலாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories:

>