×

வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூரில் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் போராட்டம்-கிராம மக்கள் எச்சரிக்கை

*மக்களின் குரல்

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த இனாம் கிளியூர் பகுதியில் பாசன வாய்க்காலை ஆக்ரமித்து சாலையாக மாற்றி உள்ளதை உடனே சரிசெய்து தராவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனாம் கிளியூர் ஊராட்சியில் ஆவூர் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய இனாம் கிளியூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை அப்பகுதியை சேர்ந்த மருதையன் என்ற விவசாயி சில நாட்களுக்கு முன் சிமெண்ட் காரைகள் கொட்டி சாலையாக மாற்றியுள்ளார். அரசுக்கு சொந்தமான வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து சாலையாக மாற்றி உள்ளதால் சுமார் நூறு ஏக்கர் பாசனம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலங்களில் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் வெளியேறுவதற்கு தடங்கள் ஏற்பட்டுள்ளது . எனவே வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள சிமெண்ட் காரைகளை உடனே அப்புறப்படுத்தகோரி மாவட்ட கலெக்டர், தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாசன வாய்க்காலில் கட்டப்பட்ட சிமெண்ட் காரைகளை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valangaiman ,Inamkliyoor , Valangaiman: Valangaiman next inam invaded the irrigation canal in Kliyur area and immediately repaired the road.
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...