×

சீர்காழி வட்டாரத்தில் பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண். அதிகாரி ஆலோசனை

சீர்காழி : சீர்காழி வட்டாரத்தில் நடபாண்டில் 2900 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்த பகுதிகளில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் தலைமையில் வேளாண்மை அலுவலர் சின்னண்ணன், துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் .ராமன் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆங்காங்கே சார் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஆரம்ப நிலையில் உள்ளது. எனவே பருத்தி பயிரை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு செய்து அதிக மகசூலை பெற்றிட வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜராஜன் கீழ்கண்ட பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்திட கேட்டு கொண்டுள்ளார். தற்போது மேலுரம் இடும்பொழுது அதிகப்படியான தழைச்சத்தினை (யூரியா) பயன்படுத்தாமல் தேவையான பரிந்துரை அளவு தழைச்சத்து உரத்தினை பயன்படுத்துவதால் சார் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

மேலும் பருத்தி பயிர் வளர்ச்சி நிலையில் இருப்பதாலும், வறண்ட வானிலையாக உள்ளதாலும் சார் உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவணி, பச்சை தத்துபூச்சிகள், மாவு பூச்சிகள் மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் இருந்திட வாய்ப்புகள் உள்ளது.விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ள வயலினை தொடர் கண்காணிப்பு செய்து இப்பூச்சிகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிர்பாதுகாப்பு செய்திட கேட்டுகொள்ளப்படுகிறது.

பூச்சிகளின் தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் பரிந்துரை பயிர் பாதுகாப்பு மருந்துகள்:மாவு பூச்சி: ஆரம்ப நிலையில் கூட்டமாக இலைகளின் அடிபாகத்தில் மெழுகுபோல காணப்படும். நாளடைவில் பூஞ்சான வளர்ச்சியாக வளர்ந்து செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறும். இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி, காய்ப்பு திறன் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.

இலைப்பேன்: இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருக்கங்களுடன் காணப்படும், செடிகளின் நுனிபாகத்தின் இலைகள் ஒழுங்கற்றும் வளர்ச்சி பாதிக்கப்பட்டும் காணப்படும்.அசுவணி: இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக சுருண்டு வளர்ச்சி குன்றி காணப்படும்.

பச்சைதத்துபூச்சி: இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருக்கங்களுடன் காணப்படும். நாளடைவில் இலைகள் கருகிய நிலைமையில் (காப்பர்பர்ன்) காணப்படும். வெள்ளை தாக்குதலினால் இலைகளில் பச்சையம் இழந்த புள்ளிகள் தோன்றி, பின் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையில் உள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறி, முதிர்ச்சி அடைவதற்கு முன்பே இலைகள் உதிர்ந்து விடும். மஞ்சள் நிற ஒட்டு பொறி ஏக்கருக்கு 5 எண்கள் வைத்து கட்டுப்படுத்தலாம்.

பயிர் பாதுகாப்பு மருந்துகள்(ஏக்கருக்கு): வேப்பங்கொட்டை சாறு - 1000 மிலி,  அசிபெட் - 500 கிராம், இமிடாகுளோர்பிரிட் - 100 மிலி, தயோமீத்தாக்சம் - 100 கிராம்.மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து பயிர் பாதுகாப்பு செய்திட சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

Tags : Sirkazhi , Sirkazhi: Cotton has been cultivated in 2900 acres in Sirkazhi area. Sirkazhi Assistant Director of Agriculture
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்