தடையை மீறி வியாபாரம் இறைச்சி கடைக்கு ரூ.5,000 அபராதம்

திருச்சி : திருச்சியில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தமிழகத்தில் கொரோ னா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதாலும், 2வதுஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் முன்னதாகவே சனிக்கிழமைகளில் மட்டன், மீன் கடைகளில் கூட்டம் அதிகம் கொரோனா அச்சமின்றி மக்கள் சுற்றித் திரிவதும் தெரியவந்ததை அடுத்து இறைச்சி கடைகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் திருச்சி -புதுகை நெடுஞ்சாலையில் உள்ள மட்டன், சிக்கன் கடையை மூடிய நிலையில் கடையின் உள்ளே வியாபாரம் நடப்பதாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது ஓட்டல்களுக்கு கறி வெட்டி அனுப்புவதாகக் கூறினர். இருப்பினும் தடையை மீறி வியாபாரம் செய்ததாக கூறி இறைச்சி கடைக்கு போலீசார் ரூ 5,000 அபராதம் விதித்தனர்.

Related Stories:

>