வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணி-பொதுமக்கள் கடும் அவதி

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாய் மற்றும் ஸ்மார்ட் சாலை, குடிநீர் குழாய்களில் மீட்டர் பொருத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் 31வது தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தது.

இதையடுத்து புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொண்டு சாலை முழுவதும் சமன்படுத்தப்பட்டது. ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை அமைக்கவில்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து எழுந்து ரத்த காயங்களுடன் வீடு திரும்புகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: