×

கவர்ச்சிக்கு குட்பை சொல்லி ஆன்மிக பாதைக்கு மாறிய கிரண்

கவர்ச்சிக்கு குட்பை சொல்லி ஆன்மிக பாதைக்கு மாறிய கிரண்

மும்பை: கமல்ஹாசனுடன் அன்பே சிவம், விக்ரமுடன் ஜெமினி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கிரண். இப்போது 40 வயதான கிரணுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தனது சமூக வலைத்தள பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை கிரண் வெளியிட்டு வந்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் அவரது ஃபாலோயர்களாக மாறினர். பலர், அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். கடைசியாக விஷால் நடித்த ஆம்பள படத்தில் கிரண் நடித்திருந்தார். பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் மதுவுக்கு அடிமையான கிரண், மனநலம் பாதிக்கப்பட்டு, இதுபோல் அரைகுறை ஆடைகளுடன் புகைப்படம் வெளியிடுவதாக கூறப்பட்டது.

மேலும் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாத அவர், திடீரென அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்து திருப்பதிக்கு சென்று வந்துள்ளார். இப்போது நான் ஆன்மிக பாதையை தேர்வு செய்துவிட்டேன் என பதிவும் வெளியிட்டிருக்கிறார். அவரது இந்த மாற்றத்துக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

The post கவர்ச்சிக்கு குட்பை சொல்லி ஆன்மிக பாதைக்கு மாறிய கிரண் appeared first on Dinakaran.

Tags : Kiran ,Mumbai ,Kamal Haasan ,Gemini ,Vikram ,
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.