×

வெங்கந்தூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் சேகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும், குடிநீர் கிணற்றை சுத்தம் செய்தும் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் கிராம மக்களின் குடிநீர் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Venkanthur village , Tindivanam: More than 500 families live in Venkandur village under the Peacock Panchayat Union next to Tindivanam.
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...