கொரோனா பாதிப்பு அதிகரிப்பு திருமங்கலத்தில் 2 தெருக்களில் தடுப்புவேலி அமைப்பு

திருமங்கலம் :  திருமங்கலம் நகர், சுற்றுபுறங்களில் கொரேனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் 35க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நகராட்சியிலுள்ள காந்திஜீ,  காமராஜர் தெருக்களில் ஒரே குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த 2 தெருக்களிலும் நகராட்சி சார்பில் தடுப்புவேலி அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories:

>