புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார்!: அதிமுக - திமுக இடையே கடும் வாக்குவாதம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக - அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டும் அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டும் வருகின்றன.  தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் அது அமையக்கூடும் என கருதப்படுகிறது. 

இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. விராலிமலை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நம்பர் தவறுதலாக இருப்பதாக தெரிவித்து தற்போது வரை அங்கு முதல் சுற்றே எண்ணப்பட்டு முடியவில்லை. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது. மற்றொரு பகுதியில் தபால் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி செய்வதாக கூறி அதிமுக- திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு தான் அதிக வாக்கு கிடைத்திருப்பதாகவும் தபால் வாக்கில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாகவும் அதிமுக - திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்தல் அலுவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>