×

மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியை போற்றுவோம்: முதல்வர் வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமணத்தின் 24வது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சமணத்தை பின்பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. 2002ம் ஆண்டு அதனை அதிமுக அரசு நீக்கினாலும், 2006ம் ஆண்டு 5வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார். சமணர்கள் இந்திய அறிவு மரபுக்கு பெரும் பங்காற்றியவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழுக்கும் எத்தனையோ இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி இணையற்ற பங்களிப்பை நல்கியவர்கள். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியை போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியை போற்றுவோம்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Mahaveer ,Jayanti ,Chennai Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Jainism ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை