×

ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு: விக்கிரமராஜா தலைமையில் கால்கோள் விழா

சென்னை ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளதையொட்டி, இதற்கான கால்கோள் விழா விக்கிரமராஜா தலைமையில் நாளை நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5, 40வது வணிகர்தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோடு, டெக்ஸ்வேலி மைதானத்தில் நடக்கிறது. பந்தல் கால்கோள்விழா ஏப்ரல் 5ம் தேதி (நாளை) காலை 9.30 மணியளவில் மாநாட்டு திடலில் நடக்கிறது. விழாவிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்கிறார்.

கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல், மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன், மாநில இணை செயலாளர் ஜி.சக்திவேல், மாநில துணைத்தலைவர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வகிக்கின்றனர். மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, ஆர்.சம்பத்குமார், ஏ.கே.வி.எஸ்.சண்முகநாதன், ஆர்.கே.காளிதாசன், பி.மகேந்திரவேல், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மண்டல தலைவர்கள் ஆம்பூர் சி.கிருஷ்ணன், டி.சண்முகம், டி.கிருபாகரன், எஸ்.வைத்திலிங்கம், கே.ஜோதிலிங்கம், எல்.செந்தில்நாதன், எம்.தமிழ்ச்செல்வம், எம்.ஆர்.சுப்ரமணியம், எம்.அமல்ராஜ், டி.செல்லமுத்து, எம்.ராதாகிருஷ்ணன், டி.பி.வி.வைகுண்டராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா நன்றி கூறுகிறார். வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது. கால்கோள் விழாவை தொடர்ந்து, மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

  • ‘தமிழ் பெயர்ப்பலகை வைக்க ஒத்துழைப்பு’
    வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ் பெயர் பலகைகளை முறையாக வைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உறுதியளித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் செல்வராஜனை தலைமை செயலகத்தில் நேற்று விக்கிரமராஜா சந்தித்தார். ‘தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் தமிழ் பெயர் பலகைகளை முறையாக வைக்க முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்’ என அப்போது அவர் உறுதியளித்தார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள் உடனிருந்தார்.

The post ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு: விக்கிரமராஜா தலைமையில் கால்கோள் விழா appeared first on Dinakaran.

Tags : Erode May 5 Traders' Rights Slogan Conference ,Kalgola Festival ,Wickramaraja ,Erode ,Vikramaraja ,
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...