×

அருணாசலப்பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்டது சீனா

பெய்ஜிங்: அருணாசலப்பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன பெயர்களை அந்நாடு அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. சீன அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 2 நிலப்பகுதி, 2 குடியிருப்பு பகுதிகள், 5 மலைகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவற்றுக்கு சீனா, திபெத், பின்யின் எழுத்துக்களில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அருணாசலப்பிரதேச பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டுவது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அருணாசலப்பிரதேசத்தின் 6 இடங்களுக்கும், 2021ம் ஆண்டு 15 இடங்களுக்கும் சீனா இதுபோன்று பெயர் சூட்டியுள்ளது. இது மூன்றாவது முறையாகும். சீன அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அருணாசலப்பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகின்றது . புதிய பெயர்களை ஒதுக்குவது உண்மையை மாற்றாது என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகமும் தொடர்ந்து திட்டவட்டமாக கூறி வருகிறது.

The post அருணாசலப்பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்டது சீனா appeared first on Dinakaran.

Tags : China ,Arunachal Pradesh ,Beijing ,Dinakaran ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30...