'பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர்'!: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டமான பதிவு..!!

டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர் என்று திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலமாக கொரோனா 2ம் அலையின் வேகம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,689 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,92,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,95,57,457 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலை வேகமாக பரவ மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமையே காரணம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில், மத்திய அரசின் செயல்பாடு குறித்து திரை நட்சத்திரங்கள் பலரும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மோடிதான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டமான பதிவு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதுபோன்ற அழகான திகிலூட்டும் காட்சிகளை தந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories:

>